கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் ஐ. பெரியசாமி

 


கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு மிகாமல் பெறப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.மதுரையில் 6 மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகே.எஸ்எஸ்.ஆர் ராமச்சந்திரன், பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பினனர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, “கடந்த ஆட்சியின் போது விவசாயி அல்லாத பலருக்கு கடன் வழங்யிருப்பதாக புகார் வந்துள்ளதாகவும் அதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் ஐ.பெரியசாமி, கூட்டுறவு வங்கியில் 5 சவரனுக்கு மிகாமல் பெறப்பட்ட நகைக் கடன்களை, தள்ளுபடி செய்யும் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.-News7

Post a Comment

Previous Post Next Post