கோவிஷீல்டு டோஸ்கள் இடைவெளியை அதிகரித்தது ஏன்? புதிய ஆய்வுக்கு நேர்மாறாக இருக்கும் அரசின் விளக்கம்

 டெல்லி: தடுப்பூசிக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாகவே கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இடையேயான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், இதற்கு மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா 2ஆம் அலை, தற்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு பல வாரங்களுக்குப் பிறகு ஒரு லட்சத்திற்கும் கீழாகக் குறைந்துள்ளது இந்நிலையில், தற்போது கொரோனா தடுப்பூசி பணிகளை மத்திய அரசு வேகப்படுத்த வேண்டும் என்றும் அப்போதுதான் மூன்றாம் அலை ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.கோவிஷீல்டு டோஸ்கள்இருப்பினும் நாட்டில் தற்போதுள்ள தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தடுப்பூசி உற்பத்தி என்பது இல்லை. இதனால், பல மாநிலங்களில் தடுப்பூசிக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. முன்னதாக கடந்த மாதம் 6 முதல் 8 வாரங்களாக இருந்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கான கால இடைவெளியை மத்திய அரசு 12 முதல் 16 வாரங்களாக அதிகப்படுத்தியது. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இரண்டு டோஸ்களுக்கான கால இடைவெளியை மத்திய அரசு அதிகரித்துள்ளதாகப் பலரும் விமர்சித்து வந்தனர்.அமைச்சர் ஹர்ஷ் வர்தன்இந்நிலையில், தடுப்பூசி டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை அதிகரித்தது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், "கோவிஷீல்ட்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ் கால இடைவெளியை அதிகரித்தது என்பது அறிவியல்பூர்வமாக கிடைத்த தரவுகளின் அடிப்படையில் வெளிப்படையாக எடுக்கப்பட்ட ஒரு முடிவு. இதுபோன்ற தரவுகளை மதிப்பீடு செய்ய இந்தியாவிடம் வலுவான கட்டமைப்பு உள்ளது. ஆனால் இதில்கூட சிலர் அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது!" எனப் பதிவிட்டுள்ளார்.பிரிட்டன் ஆய்வுஇது குறித்து மத்திய அரசின் அறிக்கையையும் அவர் ட்விட்டரில் இணைத்துள்ளார். அதில், தடுப்பூசிகளுக்கு இடையேயான கால இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் செயல்திறன் 65-88% வரை அதிகரிப்பதாகப் பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகளுக்கு இடையேயான கால இடைவெளியை 12 வாரங்களாகப் பிரிட்டன் அதிகப்படுத்தியது.வல்லுநர் குழு பரிந்துரைதடுப்பூசிக்கு இடையேயான கால இடைவெளியை அதிகரிப்பதன் மூலம், செயல்திறன் அதிகரிப்பது தெளிவாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே இந்தியாவில் தடுப்பூசிக்கு இடையேயான கால இடைவெளியை அதிகரிப்பது குறித்து பரிந்துரையைத் தடுப்பூசி வல்லுநர் குழு வழங்கியது. அந்த பரிந்துரை அடிப்படையிலேயே இரண்டு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டது" என அதில் கூறப்பட்டுள்ளது.புதிய ஆய்வுஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், இந்தியாவில் 2ஆம் அலையின் போது அதிக பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா குறித்த ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள் வெளியானது. அதில் டெல்டா வகை கொரோனா தீவிர கொரோனா பாதிப்பை இரட்டிப்பாக்குவதாகக் கூறப்பட்டிருந்தது. அதேபோல தடுப்பூசிகளின் செயல்திறனும் டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக குறைவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.குறைக்க வேண்டும்அதேநேரம் ஒருவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை எடுத்துக் கொண்டால், அவரது உடலில் டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராகப் போராடும் அளவுக்கு ஆன்டிபாடிகள் உருவாகிறது என்றும் எனவே, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாகத் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் மக்களுக்குச் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. அதாவது இந்தியாவில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டது. இது மத்திய அரசின் பரிந்துரைக்கு நேர் மாறாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post