தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழிலேயே அர்ச்சனை.. வேகம் காட்டும் அமைச்சர் சேகர் பாபு..ஆலோசனை!சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக நாளை மறுநாள் ஆலோசனை நடைபெற உள்ளது.தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக சேகர் பாபு பொறுப்பேற்றதில் இருந்தே முக்கியமான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கோவில்கள் சீரமைப்பு, நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை என்று சேகர் பாபு தொடர்ந்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.!கோவில் சொத்துக்கள் அனைத்தும் இணைத்ததில் பதிவேற்றப்படும் என்று ஏற்கனவே சேகர் பாபு அறிவித்து இருந்தார். அதன்படியே கோயிகளுக்கு சொந்தமான 3,43,647 ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டது.பதிவேற்றம்அதன்பின் சாலிகிராமம், காந்தி நகர் பகுதியில் வடபழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.250 கோடி ஆகும். அமைச்சரின் முயற்சியால் இந்த நிலம் மீட்கப்பட்டது. இதேபோல் தமிழ்நாடு முழுக்க இருக்கும் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.அர்ச்சகர்அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் விரிவாக்கப்படும். பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் 100 நாட்களுக்குள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் சேகர் பாபு குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக நாளை மறுநாள் அமைச்சர் சேகர் ஆலோசனை நடத்த உள்ளார்.ஆலோசனைதமிழில் அர்ச்சனை செய்யும் நடைமுறை, அறங்காவலர்கள் நியமனம், இதற்கான தகுதிகள், கோவில்களை நிர்வகிக்கும் மாவட்ட அளவிலான குழுக்கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர் பாபு கூட்டம் நடத்த உள்ளார்.

Post a Comment

Previous Post Next Post