எதிர்காலத்திற்காக செயல்படுவது.. இதுதான் தமிழ்நாடு மாடல் வளர்ச்சி.. ஸ்டாலின் எடுத்த சூப்பர் முயற்சி

 


சென்னை: கொரோனா காரணமாக கொஞ்ச நாளைக்கு முன்பு ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். அப்போது ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெற முடிவெடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கான முயற்சிக்கு இன்று அடித்தளம் போட்டுள்ளார்.ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க முன்வருமாறு தொழில் நிறுவனங்களுக்கு இன்று அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார் ஸ்டாலின். ஒரு விஷயம் இல்லை என்றால், அதில் எதிர்காலத்தில் அதில் தன்னிறைவு பெறுவது தான் தமிழ்நாடு மாடல் வளர்ச்சிஒரு மாநிலத்தில் இயற்கையாகவே எல்லா தொழில்வளமும் அற்புதமாக உள்ள மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். ஐடி நிறுவனங்கள் தொடங்கி கார் நிறுவனங்கள் வரை அனைத்து வகை தொழில்களும் உள்ள மாநிலம். நாட்டின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய கட்டமைப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு ஆகும்.கட்டமைப்புஒவ்வொரு கிராமத்திலும் கட்டாயம் தொடக்கப்பள்ளியாவது இருக்கும். ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல்நிலைப்பள்ளிகளும் உயர்நிலைப்பள்ளிகளும் தமிழ்நாட்டில் இருக்கும். ஒவ்வாரு 10 கிலோமீட்டர் அல்லது 15 கிலோ மீட்டர் தூரத்தில் நிச்சயம் பெரிய கல்லூரிகள் இருக்கும்.மத்திய அரசு உயர்கல்வியை 50 சதவீதம் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. அதை 15 வருடங்களுக்கு முன்பே அடைந்த மாநிலம் தமிழகம்.மருத்துவ கல்லூரிகள்இதேபோல் மருத்துவ கட்டமைப்பு என்று பார்த்தால் மருத்துவ கல்லூரிகள் நாட்டிலேயே அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று தெரிகிறது. அரசு மருத்துவக்கல்லூரிகள் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இப்போது உள்ளது. ஒவ்வொரு 10 கிலோமீட்டருக்குள் கட்டாயம் ஆரம்ப சுகாதார நிலையமும், ஒவ்வொரு நகரத்திலும், பேரூராட்சிகளிலும் பல வசதிகளுடன் அரசு மருத்துவமனைகள் எல்லா மாவட்டங்களிலும் உள்ளது.வளர்ச்சி திட்டங்கள்திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே கடந்த 50 ஆண்டுகளில் செய்த பெரிய விஷயம். கல்விக்கும் மருத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியது தான். அதேபோல் இவர்களின் அரசியல் என்பது யாருடைய ஆட்சியில் சிறப்பான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பதை மையப்படுத்தியே இருக்கும். ஊழல் குற்றச்சாட்டுகள் ஒரு புறம் இருந்தாலும், கடந்த ஆட்சியை ஒப்பிடும் போது, வளர்ச்சி அதிகம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். இதுவே தமிழ்நாடு வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.தன்னிறைவு பெற முடிவுதமிழகத்தில் கொரோனோ தொற்றால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட உடன், எந்தெந்த மாநிலங்களில் இருந்தோ அதை ரயில்கள் மூலம் இறக்குமதி செய்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, எதிர்காலத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிக்க வேண்டும் என்பதற்காக ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவு பெற முடிவெடுத்தது. அதற்காக ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க முன்வருமாறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.நிலம் வழங்கப்படும்மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் அது தொடர்புடைய பொருட்களின் உற்பத்திக்கான சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளார். 30 சதவீத மூலதன மானியம் அளிக்கப்படும் என்றும். 100 சதவீதம் வரை முத்திரை வரி விலக்குச் சலுகை அளிக்கப்படும் என்றும்,நிறுவனம் மூலம் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி மானியத்துடன் உடனடியக் கடன்கள் வழங்கப்படும் என்றும், சிப்காட் மூலம் இடம் ஒதுக்கப்படும் என்றும், நிலத்தின் விலையில் சலுகை வழங்கப்படும் என்றும், கட்டணமின்றி ஒற்றைச் சாளர அனுமதி நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்,தமிழ்நாடு மாடல்இதன்படி ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டால் எதிர்காலத்தில் மற்ற மாநிலங்களிடம் ஆக்சிஜனுக்கு கையேந்தும் நிலை வராது என்று கூறப்படுகிறது. ஒரு விஷயம் இல்லை என்றால், அதை உருவாக்கதற்காக கட்டமைப்பு உருவாக்குவதுடன் அதை செய்து காட்டுவதன் தமிழ்நாட்டில் இயல்பான ஒன்று. இதுதான் தமிழ்நாடு மாடல் வளர்ச்சி. இதனிடையே தமிழகத்திலேயே முதல்முறையாக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.'' 

Post a Comment

Previous Post Next Post