எல்லாரும் நல்லா இருக்கீங்களா. ....ஆசிரியர்களிடம் நலம் விசாரித்த முதல்வர்.....சென்னை: சாலையோரத்தில் காத்திருந்த பணி நியமனம் கிடைக்காத ஆசிரியர்களை பார்த்ததும் காரை நிறுத்தி கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.பதவியேற்ற நாளில் இருந்து ஒன்றரை மாதங்களாக ஸ்டாலினின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவைகளாகவே உள்ளன. தம்மிடம் கோரிக்கை மனுக்களை கொடுப்போருக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுகிறார்.அந்த வகையில் கடந்த வாரம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க சேலம் சென்ற முதல்வர், பொதுப் பணித் துறை ஆய்வு மாளிகையில் தங்கிவிட்டு காரிலிருந்து மேட்டூர் சென்றார்.பொதுமக்கள்அப்போது ஆய்வு மாளிகை வாசலில் காத்திருந்த பொதுமக்களை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அது போல் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் காத்திருந்த தூய்மைப் பணியாளர்களை பார்த்த முதல்வர் அவர்களை நலம் விசாரித்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.சாலையோரம்அது போல் அழகாபுரம் பகுதியில் சாலையோரம் கோரிக்கை மனுவுடன் நின்றிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பார்த்து காரை நிறுத்தி அவரிடம் இருந்தும் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வெளியே வந்தார் ஸ்டாலின்.ஸ்டாலின்அப்போது ஆசிரியர்கள் சிலர் கோரிக்கை மனுக்களுடன் காத்திருந்ததை பார்த்த ஸ்டாலின் காரை நிறுத்தி அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் எதற்காக காத்திருக்கிறீர்கள் என விசாரித்தார். 2018-19 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களான தாங்கள் 1500 பேர் இரண்டாம் பட்டியலில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாக தெரிவித்தனர்.பணி நியமன ஆணைமேலும் தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு பார்வார்டு செய்யப்பட்டு ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்..: ,

Post a Comment

Previous Post Next Post