திருக்குறளை பாடமாக அறிமுகம் செய்கிறது சென்னைப் பல்கலைக்கழகம்

 


'

தொழில் தர்மத்துக்கான திருக்குறள்' என்ற பெயரில் திருக்குறளை பாடமாக அறிமுகம் செய்கிறது சென்னைப் பல்கலைக்கழகம். 




சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி வெளியிட்டுள்ள தகவலில், 'தொழில் தர்மத்துக்கான திருக்குறள்' என்ற பெயரில் சென்னை பல்கலைக்கழகத்தில் திருக்குறள் பாடம் அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில், இளங்கலை மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பாடமாக அறிமுகப்படும், என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர, ஓய்வுபெற்ற துணைவேந்தர்கள், உலகளாவிய கல்வியாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்ட குழு ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post