டெல்டா, டெல்டா பிளஸ்ஸை தடுக்கும் \'சூப்பர் வேக்சினை\' கண்டுபிடித்த அமெரிக்க ஆய்வாளர்கள்

அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர், டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா திரிபுகளுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசியொன்றை கண்டறிந்து வருகின்றனர்.

ஹைப்ரிட் தடுப்பூசி என்ற முறை மூலம் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசி, ‘சூப்பர் வேக்சின்’ என்ற பெயரில் விற்பனைக்கு வருமென கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினாவிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இது கண்டறியப்பட்டுள்ளது.
>> கொரோனா வைரஸ்
டெல்டா, டெல்டா பிளஸ்ஸை தடுக்கும் \'சூப்பர் வேக்சினை\' கண்டுபிடித்த அமெரிக்க ஆய்வாளர்கள்
   Web Team
Published :24,Jun 2021 06:29 PM

Subscribe

Scientists-developing-universal-vaccine-to-fight-Covid-19-variants--human-trials-next-year
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர், டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா திரிபுகளுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசியொன்றை கண்டறிந்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Ads by

Advertisement

ஹைப்ரிட் தடுப்பூசி என்ற முறை மூலம் தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசி, ‘சூப்பர் வேக்சின்’ என்ற பெயரில் விற்பனைக்கு வருமென கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலினாவிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இது கண்டறியப்பட்டுள்ளது.
எலிகள் மத்தியில் இது பரிசோதிக்கப்பட்டபோது, கொரோனாவிலிருக்கும் பல ஸ்பைக் புரதத்துக்கு எதிராக இது செயல்படுவது உறுதியாகியுள்ளது. ஆகவே பல கொரோனா திரிபுகளுக்கு எதிராக இது செயல்படும் எனக்கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றாக, தென் ஆப்ரிக்காவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய பி.1.351 திரிபும் ஒன்றென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இந்த ‘சூப்பர் வேக்சின்’ தடுப்பூசி, கோவிட் 19 கொரோனா மட்டுமன்றி, கொரோனாவின் வேறு வகை வைரஸ் சிலவற்றுக்கும் எதிராக செயல்படுவது, எலிகளுக்கிடையான பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. முக்கியமாக, நுரையீரல் சார்ந்த பாதுகாப்பு தடுக்கப்படுவது தெரியவந்துள்ளது. அடுத்த வருடத்தில், மனிதர்கள் மீதான இந்த தடுப்பூசிக்கான பரிசோதனைகள் தொடங்குமென தெரிகிறது.

Post a Comment

Previous Post Next Post