செப்டம்பரில் கோவோவேக்ஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் - அடார் பூனாவாலா அறிவிப்பு

 


அமெரிக்க  நோவாவாக்ஸ்  நிறுவனத்தின் தடுப்பூசியை, கோவோவேக்ஸ் என்ற பெயரில், வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு விட உள்ளதாக, சீரம் இந்தியா தெரிவித்துள்ளது.இந்த தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக மிகவும் திறனுடன் செயலாற்றும் என நோவாவாக்ஸ் இரண்டு தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.இந்த நிலையில் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சீரம் இந்தியா சிஇஓ அடார் பூனாவாலா, மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் செப்டம்பரில் இந்த தடுப்பூசி விற்பனைக்கு வரும் என்றார். அடுத்த மாதம் முதல் கோவோவேக்சினின் கிளினிகல் சோதனை குழந்தைகளிடம் நடத்தப்படும் என அவர் கூறினார்.-Polimer News

Post a Comment

Previous Post Next Post