ஸ்வீட் நியூஸ்.. தமிழ்நாட்டில் 83 நாட்களுக்கு பிறகு.. கொரோனா பாசிட்டிவ் விகிதம் 3.6% ஆக குறைந்தது!

 சென்னை: தமிழ்நாட்டில் 83 நாட்களுக்கு பிறகு கொரோனா பாசிட்டிவ் விகிதம் 3.6% ஆக குறைந்துள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.4% ஆக உள்ளது.தமிழ்நாட்டில் ஒரு வழியாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகவே கொரோனா வைரஸ் குறைந்துள்ளது. ஒரு கட்டத்தில் 36,000-க்கு மேல் தினசரி பாதிப்பு சென்ற நிலையில் தற்போது 7,000-க்குள் குறைந்து விட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்? அதாவது சுமார் 83 நாட்களுக்கு பிறகு கொரோனா பாசிட்டிவ் விகிதம் 3% நோக்கி செல்கிறது. இன்று கொரோனா பாசிட்டிவ் விகிதம் 3.6% ஆக இருக்கிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 50,000-க்கு கீழ் குறைந்து 49,845 உள்ளது.தலைநகர் சென்னையில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 1.4% ஆக உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் கொரோனா வைரஸ் தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த். சென்னையில் 26,529 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 3530 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இன்று கோவையில் அதிகபட்சமாக 756 பேருக்கும், ஈரோட்டில் 641 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.,

Post a Comment

Previous Post Next Post