ஐந்து வருடங்களில் '80 ஆயிரம்' கோடி சம்பளம்.. சுந்தர் பிச்சைக்கு கூகுள் அளித்த சூப்பர் கௌரவம்

 நியூயார்க் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் சிஇஒவாக இருக்கும் சுந்தர் பிச்சைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 80 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் அதிக சம்பளம் பெறும் டெக் நிறுவனங்களில் சிஒஇக்களின் சம்பள பட்டியலில் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க்கிற்கு 4.17லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2012 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் பங்குகள் மற்றும் சம்பளமாக இந்த தொகை பேஸ்புக் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவத்தின் சிஇஒவாக உள்ள சுந்தர் பிச்சை 80 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். 2015 முதல் 2020 வரை பங்குகள், இழப்பீடுகள், பணம் என அவருக்கு 80 ஆயிரம் கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் வழங்கி உள்ளது.என்ன செய்தார்இந்த சம்பளத்தை பார்த்து நம்மூரில் வாயடைத்து போய் இருக்கிறார்கள். அவர்களுக்காக சுந்தர் பிச்சை எந்த அளவிற்கு புதிய கண்டுபிடிப்பை கொண்டு வந்து சாதித்துள்ளார் என்பதையும், அதற்கு தரப்பட்டதுதான் இந்த வெகுமதி என்பதையும் நிச்சம் நாம் அறிய வேண்டும்.கண்டுபிடிப்புமதுரையில் பிறந்து சென்னை அசோக் நகரில் வளர்ந்த சுந்தர் பிச்சை வீட்டில் ஆரம்பத்தில் டிவி இல்லை. கம்ப்யூட்டரை அவர் அமெரிக்கா போகும் வரை பார்க்கவிலாலை. அமெரிக்காவில் கடினமான பொருளாதார சூழலும் படித்து, கூகுளில் சாதாரண ஊழியராக வேலைக்கு சேர்ந்தார். அங்கு எல்லோரையும் போல் சாமானியராக வேலையை செய்துவிட்டு வந்தவிடவில்லை. தனது புதிய கண்டுபிடிப்பை உலகிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் மெனக்கிட்டார். அவர் மெனக்கெட்டு உருவாக்கிய கண்டுபிடிப்பு கூகுள் குரோம்.உலகை ஆள்கிறதுஇணைய உலகில் முன்னணி நிறுவனமாக இருந்த 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்திடம் 'இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' என தேடுபொறி இருந்தது. அதேபோல் யாகூ நிறுவனமும் தேடுபொறி வைத்திருந்தது. 2000த்திற்கு முன்பு பிறந்த பலர் 'இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைதான் 2008 வரை அதிகமாக பயன்படுத்தி இருப்பார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த பிரௌசர்களை கூகுள் குரோம் மூலம் ஓரம்கட்டினார். இவரது கூகுள் குரோம் ஐடியாவை அப்போது இருந்த கூகுள் சிஇஒ பெரியதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அப்படியே விட்டுவிடாமல் கூகுள் நிறுவனங்களான லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோரிடம் தனது முயற்சியை தெரிவித்ர். அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதன்பிறகு சுந்தர்பிச்சை உருவாக்கிய கூகுள் குரோம் உலகையே ஆட்டி படைக்கிறது. சாதித்தார் சுந்தர் பிச்சைஇதேபோல் 2010க்கு பிறகு நடந்த மாற்றத்தை சொல்லியாக வேண்டும். மொபைல்களின் அரசானக உள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளமும் கூகுள் சிஇஒவாக சுந்தர் பிச்சையின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்டது தான். எல்லோரும் கணிணி, லேப்டாப் என்று டெக்ஸ்டாப் இணையத்தின் பின்னாள் இருந்த காலக்கட்டத்தில், மொபைல் சர்ச் என்ஜின் தான் நாளையே உலகையே ஆளப்போகிறது என்பதை கணித்தார். இன்றைக்கு ஆண்ட்ராய்டு இயங்குதளம் தான் மொபைலை இயக்குகிறது. ஆண்ட்ராய்டு போன் என்பதே ஸ்மார்ட்போன்களின் பெயராகிவிட்டது. மேலே தனது ஆல்பெபட் நிறுவனத்திற்கும் சிஇஓ ஆக்கி உள்ளது. அமெரிக்கர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. திறமையானர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வேடிக்கை மட்டும் பார்ப்பது. அதைத்தான் கூகுள் நிறுவனர்கள் செய்தார்கள். இன்றைக்கு 80 ஆயிரம் கோடி சம்பளம் சுந்தர் பிச்சை ஐந்து ஆண்டுகளில் வாங்கியிருக்கிறார் என்றால் அதற்கு அவரது கடின உழைப்பும், புதிய சிந்தனையும் அதற்கான முயற்சியுமே காரணம்.

Post a Comment

Previous Post Next Post