எனது 50 வருட கனவு இது..' விண்வெளிக்கு பறக்கும் ஜெப் பெசோஸ்.. அவருடன் செல்வது யார் தெரியுமா?


வாஷிங்டன்: உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும் அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ், அவரது சகோதருடன் அடுத்த மாதம் விண்வெளிக்குச் செல்லவுள்ளார்.உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் ஜெப் பெசோஸ். உலகின் மிகப் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான் நிறுவனத்தை இவர் நடத்தி வருகிறார்.தஞ்சையில் மூட்டை மூட்டையாக சிக்கிய 'பாட்டில்கள்' இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் செய்த பகீர்! டிஐஜி அதிரடி இதுதவிர ' ' என்ற நிறுவனம் ஒன்றையும் ஜெப் பேசோஸ் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் விண்வெளி பயணங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.ப்ளூ ஆரிஜின் நிறுவனம்இந்த ப்ளூ ஆரிஜின் நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வது குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில்என்ற இந்த ராக்கெட் 15 முறை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்முறையாக அடுத்த மாதம் இந்த ராக்கெட் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவுள்ளது ப்ளூ ஆரிஜின் நிறுவனம்.விண்வெளிக்குச் செல்லும் ஜெப் பெசோஸ்இந்த ராக்கெட்டில் தான் 57 வயதாகும் ஜெப் பெசோஸ் விண்வெளிக்குச் செல்லவுள்ளார். அடுத்த மாதம் 20ஆம் தேதி ஜெப் பெசோஸ் விண்வெளிக்குச் செல்லவுள்ளார். அவருடன் இணைந்து அவரது சகோதரும் விண்வெளிக்குச் செல்லவுள்ளார். இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.ராக்கெட் இருவரையும் பூமியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவிற்கு அழைத்துச் செல்லவுள்ளது.ஐந்து வயதிலிருந்து கனவுஇது குறித்து ஜெப் பெசோஸ் கூறுகையில், "எனக்கு ஐந்து வயதாகும்போது இருந்தே விண்வெளிக்குச் செல்வது குறித்து நான் கனவு கண்டுள்ளேன். எனது கனவு தற்போது நினைவாகிறது. ஜூலை 20ஆம் தேதி நான் எனது சகோதரனுடன் இணைந்து விண்வெளிக்குச் செல்கிறேன். விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும்போது, அது உங்களை முழுவதுமாக மாற்றுகிறது. எனது வாழ்க்கையில் நான் மிகவும் ஆசைப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இது எனக்கு மிகப் பெரிய விஷயம்" என்று அவர் தெரிவித்தார்.வெறும் 10 நிமிடம் தான்இந்த பயணம் மொத்தம் 10 நிமிடங்கள் வரை நீடிக்கும். அதில் நான்கு நிமிடங்கள்க்கு மேலே ராக்கெட் இருக்கும். பூமியின் வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையில் இருக்கும் எல்லைதான் இந்த. அதாவது இந்த கோட்டை தாண்டினால் அவர்கள் விண்வெளிக்குச் சென்றதாகப் பொருள். இவர்கள் இருவருடன் மற்றொருவரும் விண்வெளிக்குப் பயணிக்க உள்ளனர். அந்த டிக்கெட்டிற்கான ஏலமும் தற்போது நடைபெற்று வருகிறது..

Post a Comment

Previous Post Next Post