கொடூர கொரோனாவால்.. பெற்றோரை இழந்த 3,621 குழந்தைகள்.. சுப்ரீம்கோர்ட்டில் என்சிபிசிஆர் தகவல்

 


கொரோனா தொற்றினால், 30,000 சிறுவர்கள் ஆதரவற்றவர்களாக இன்று மாறி உள்ளதாக சுப்ரீம்கோர்ட்டில் என்சிபிசிஆர் தெரிவித்துள்ளது... இதையடுத்து, சட்ட விரோதமாக குழந்தைகளை தத்தெடுப்பதை தடுக்க விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சுப்ரீம்கோர்ட் அறிவித்துள்ளது.கொரோனாவைரஸ் ஏராளமான இழப்புகளை தந்துவருகிறது.. ஏராளமான உயிர்களை பறித்து கொண்டு போயுள்ளது.. இதனால் எண்ணற்ற குழந்தைகள் ஆதரவின்றி தவிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட் தானாகவே முன் வந்து விசாரித்து வருகிறது.. இதுதொடர்பாக நேற்று சுப்ரீம்கோர்ட்டில் என்சிபிசிஆர் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தனர். அதில் உள்ள அதிர்ச்சி தகவல்கள் இவைதான்:உ.பி.: லக்னோ உட்பட 5 நகரங்களில் முழு லாக்டவுன் இல்லை- ஹைகோர்ட் உத்தரவை நிறுத்தி வைத்த சுப்ரீம்கோர்ட்பெற்றோர்கடந்த ஏப்ரல் 1 முதல் இந்த வருஷம் ஜூன் வரை 26,176 பேர் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர்.. 3,621 பேர், அப்பா, அம்மா என 2 பேரையுமே இழந்துள்ளனர்.. 274 பேர் யாருமே இல்லாமல் கைவிடப்பட்டுள்ளனர். மொத்தம் 30,071 பேர் இந்நிலைக்கு ஆளாகி உள்ளனர்.பெற்றோர்இறந்துபோன பெற்றோர்கள் பெரும்பாலும் தொற்று பாதித்தே இறந்துள்ளனர்.. இவர்களில் 15,620 சிறுவர்கள், 14,447 சிறுமிகள். 4 பேர் திருநங்கைகளும் ஆவர்.... 11,815 பேர் 8 முதல் 13 வயதுக்குட்பட்டவர்கள். இதில், அதிகமாக பெற்றோரை இழந்த சிறுவர்கள் மகாராஷ்டிரத்தில்தான் அதிகம் உள்ளனர்.. 7,084 சிறுவர்கள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளனர்..சட்ட விரோதம்இதற்கு உத்தரபிரதேசத்தில் 3,172, 3வது இடத்தில் ராஜஸ்தானில் 2,482 பேரும், அடுத்து மத்திய பிரதேசத்தில், 2,243 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளன.இதுபோன்ற ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து சோஷியல் மீடியாவிலும் தகவல்கள் வெளியாகி வருகின்றன... ஆனால், இது சட்ட விரோதமானது.. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..வங்கி கணக்குஅதேபோல, குழந்தைகளின் நலன்கருதி பொதுமக்கள் நன்கொடை தருவதற்கு ஏதுவாக வங்கி கணக்கு விவரங்களுடன் கூடிய மாநில சிறார் நிதி திட்டத்தையும் தொடங்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.நடைமுறைகள்இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் கேஎம் நடராஜ் ஆஜரானார்.. அப்போது, ஆதரவற்ற, கைவிடப்பட்ட, கவனிப்பாரின்றி சரணடைந்த குழந்தைகளை தத்தெடுப்பதற்கு சிறார் நீதிச்சட்டம் 2015-ன் கீழ் உள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், இந்தநடைமுறைகளுக்கு பிற,க குழந்தைகளை தத்தெடுப்பது சட்டபூர்வமானதாக இருக்கும், இதையெல்லாம் கடைபிடிக்காமல், குழந்தைகளை தத்தெடுத்தால் அது செல்லுபடியாகாது என்றார்.அறிவிப்புஇதையடுத்து, நீதிபதிகள், எல். நாகேஸ்வரராவ், அனிருத்தா போஸ் ஆகியோர் கொண்ட அமர்வானது, "ஆதரவற்ற குழந்தைகளை சட்ட விரோதமாக தத்தெடுப்பதை தடுக்க இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிடும்.. குழந்தைகளை சட்ட விரோதமாக தத்தெடுப்பதை தடுக்க வேண்டும்... அதேபோல, ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு அவர்களது எதிர்காலமும் காக்கப்பட வேண்டும்." என்றனர்.30002600020: ,8, 2021,8:37 [](?)

Post a Comment

Previous Post Next Post