ஃபோர்ப்ஸ் பட்டியல்: ஓராண்டில் ரூ.23,000 கோடி வருவாய் ஈட்டிய 50 விளையாட்டு நட்சத்திரங்கள்

 

உலகம் முழுவதும் சிறந்த 50 விளையாட்டு நட்சத்திரங்கள் ஒட்டுமொத்தமாக ஒரு வருடத்தில் 23 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர்.ஆண்டுதோறும் பிரபலமான தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா துறையினர் உள்ளிட்டோரின் வருமான பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. விளையாட்டு துறையில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு மே வரையில் அதிக வருவாய் ஈட்டிய சிறந்த 50 நட்சத்திரங்களின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.தொற்றுநோய் காரணமாக உலகம் முழுக்க பல்வேறு போட்டிகள், தொடர்கள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் அவர்களின் வருவாய் அதிகரித்தே இருக்கிறது. இந்த ஐம்பது வீரர்களும் சேர்த்து 2020-21ஆம் ஆண்டில் சுமார் 22,960 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 16 சதவிகிதம் அதிகமாகும்.இதில், 1,476 கோடி ரூபாய் வருமானத்துடன் யு.எஃப்.சி. விளையாட்டு வீரர் கோனார் மெக்ரிகோர் முதலிடத்தில் உள்ளார். நட்சத்திர கால்பந்தாட்ட வீரர்களான லியோனல் மெஸ்ஸி 1,066 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ 984 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திலும், ரக்பி வீரர் டாக் ப்ரீஸ்காட் 882 கோடி ரூபாய் வருவாயுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர்.கூடைப்பந்தாட்ட வீரர் லெப்ரான் ஜேம்ஸ் 791 கோடி ரூபாய் சம்பாதித்து ஐந்தாம் இடத்திலும், கால்பந்தாட்ட வீரர் நெய்மர் 779 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி ஆறாம் இடத்திலும், டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் 738 கோடி வருமானத்துடன் ஏழாம் இடத்திலும் உள்ளனர். 8ஆம் இடத்தில் உள்ள கார்பந்தய வீரர் லெவிஸ் ஹாமில்டன் ஓராண்டில் 672 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். ரக்பி வீரர் டாம் பிராடி 623 கோடி வருமானம் ஈட்டி 9ஆம் இடத்தில் உள்ளார். பத்தாம் இடத்தில் கூடைப்பந்தாட்ட வீரர் கெவின் டூரண்ட் 615 கோடியுடன் உள்ளார்.-

Post a Comment

Previous Post Next Post