ஊரடங்கு நீட்டிப்பா ?முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

 


ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.


தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்துவந்தாலும், பிற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றின் தீவிரத்தை உணராமல், சிலர் தேவையின்றி வெளியே சுற்றுகின்றனர். உரிய அனுமதியின்றி வெளியே வருவோரின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.


இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவம், வருவாய், பொதுத்துறை மற்றும் காவல்துறையினருடன் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்துகிறார். காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

Post a Comment

Previous Post Next Post