பத்மா சேஷாத்ரி.. மாநில அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டம்.. டாப் கியரில் \"அன்பில்\".. பின்னணி


சென்னை: பிரச்சினைக்குரிய பத்மா சேஷாத்ரி பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். ஆனால் இது சாத்தியம் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.சென்னை கேகே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் மாணவிகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக பல மாணவிகள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதில் மாணவிகளின் புகாரை தொடர்ந்து ராஜகோபாலன் என்ற பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ஆனால் இன்னும் பல ஆசிரியர்கள் உள்ளே இருப்பதாக ராஜகோபாலனே வாக்குமூலத்தில் தெரிவித்து இருக்கிறார். பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம்.. அரசியல் ஆதாயத்திற்காக, ஜாதி பிரச்சினையாக மாற்றுகிறார்கள்- கமல்ஹாசன்ஆசிரியர்மேலும் 3 ஆசிரியர்கள் இதேபோல் மாணவிகளை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. 30க்கும் மேற்பட்ட மாணவிகள் இது தொடர்பாக தமிழக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இன்னும் பல ஆசிரியர்கள், பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகள் சிலரும் கூட இதில் சிக்கலாம் என்று தகவல்கள் வருகிறது.கோரிக்கைஇந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசே இந்த பள்ளியை ஏற்று நடத்த வேண்டும். பள்ளி நிர்வாகம் மாணவிகள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு பயிலும் மாணவிகளுக்கு இனி பாதுகாப்பு இல்லை, எனவே அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பலர் இணையத்தில் கோரிக்கை வைத்து வந்தனர்.அன்பில்இந்த நிலையில்தான் பிரச்சினைக்குரிய பத்மா சேஷாத்ரி பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். மக்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி நிர்வாகம் சரிவர செயல்படாத காரணத்தால் அரசே இதை ஏற்று நடத்தும் முடிவில் உள்ளது. இது தொடர்பாக அன்பில் மகேஸ் பொய்யாமொழி முக்கியமான விஷயம் ஒன்றையும் குறிப்பிட்டார்.என்ன சொன்னார்அதாவது இது சிபிஎஸ்இ பள்ளி என்பதால், மத்திய அரசிடம் அனுமதி கேட்டு, பள்ளியை எடுத்து நடத்துவோம் என்று கூறியுள்ளார். மத்திய அரசு இதற்கு அனுமதி தருமா என்பது சந்தேகம்தான் என்றாலும், தமிழக அரசு கண்டிப்பாக இதில் பெரிய அளவில் முயற்சிகளை எடுக்கும் என்கிறார்கள். இந்த பள்ளி பாலியல் ரீதியாக, ஜாதி, மத ரீதியாகவும் மாணவர்களை துன்புறுத்தி உள்ளதால், இதை கண்டிப்பாக தமிழக அரசு சும்மா விடாது என்கிறார்கள்.அன்பில் மகேஷ் திட்டம்இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கத்தில் இருந்தே டாப் கியரில் சென்று கொண்டு இருக்கிறார். புகார் வந்த ஒன்றரை மணி நேரத்தில் விசாரணை, 3 மணி நேரத்தில் புதிய குழு அமைத்தது, 10 மணி நேரத்தில் கைது என்று செம வேகமாக விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இதனால் வரும் நாட்களில் பத்மா சேஷாத்ரி பள்ளியில் மேலும் சிலர் சிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.:

Post a Comment

Previous Post Next Post