இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு.. தொடர்ந்து உயரும் உயிரிழப்பு.. இது எப்போது சரியாகும்?


டெல்லி: இந்தியாவின் கொரோனா பாதிப்பு குறித்த கடந்த சில வார புள்ளிவிவரங்களை எடுத்து பார்த்தால், இந்தியா பல விஷயங்களில் முன்னேறி உள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தவிட்டது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துவிட்டது. நோய் தொற்று பரவும் விகிதமும், தீவிரமான பாதிப்பு நிலையும் பல மாநிலங்களில் குறைந்துவிட்டது.இருப்பினும், சுகாதார அதிகாரிகளுக்கு தொடர்ந்து கவலை அளிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் , இறப்பு விகிதங்களின் தொடர்ச்சியாக அதிகமாக இருப்பது தான். .கொடிய கொரோனா தொற்றின் 2வது அலையால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற நாடுகளை விட இந்தியாவில் வழக்கு இறப்பு விகிதம் (சி.எஃப்.ஆர்) கணிசமாகக் குறைவாக இருந்தாலும், இந்த எண்ணிக்கை மே இரண்டாம் பாதியில் அதிகரித்துள்ளது. தஞ்சை மருத்துமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து கொடுத்த துபாய் தொழில் அதிபர்! மே மாதத்தின் முதல் 15 நாட்களில், நாட்டின் தினசரி உயிரிழப்பு விகிதம் 1.06 சதவீதம் ஆக இருந்தது. அதாவது 58,431 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு நாடு தெரிவித்தது இருப்பினும், அடுத்த 14 நாட்களில் (மே 16-29), தினசரி உயிரிழப்பு விகிதம் 1.73 சதவீதம் உயர்ந்தது. சராசரியாக 55,688 குடிமக்கள் உயிரிழந்ததா சுகாதாரத்தறை தெரிவித்துள்ளது. அதாவது பாதிப்பு அதிகமாகஇருந்த போது குறைவாக இருந்த மரண விகிதம், பாதிப்பு குறைந்த பின் அதிகரித்துள்ளது.உயிரிழப்பு அதிகம்மே மாதத்தின் முதல் 15 நாட்களுடன் ஒப்பிடும்போது மே மாதத்தின் இரண்டாவது பாதியில் கிட்டத்தட்ட 42 சதவீதம் அளவிற்கு தொறறு பாதிப்பு நாட்டில் குறைந்துள்ளது. ஆனால் உயிரிழப்பு விதிகம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. இந்த மே மாதம் தான்இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இறப்பை கணக்கிடும் சி.எஃப்.ஆர் 1.31 சதவீதமாகி உள்ளது.. ஜனவரி மாதம் சி.எஃப்.ஆர் 1.15 சதவீதமாக இருந்தது, மார்ச் மாத எண்ணிக்கை 0.52 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் கொரோனாவால் இறப்பவர்கள் விகிதம் (ஒட்டுமொத்த சி.எஃப்.ஆர்) 1.17 சதவீதமாக உள்ளது.ஏப்ரல் மே மாதம் அதிகம்மே மாதத்தில் சராசரியாக தினசரி 3,935 இறப்புகள் பாதிவாகி உள்ளது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் சராசரியாக 1,631 இறப்புகள் என்றுதான் இருந்தது.கடந்த இரண்டு மாதங்கள் எவ்வளவு மோசமாக இருந்தன என்பதைப் புரிந்து கொள்ள பிப்ரவரி மாத நிலவரத்தை பார்க்க வேண்டும். பிப்ரவரி சராசரியாக தினசரி கோவிட் -19 இறப்புகள் 99 என இருந்தது.இரண்டு வாரம் வேணும்இப்போது கொரோனா கேஸ்கள் நாட்டில் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பது ஏன்? என்று கேள்வி எழலாம். இதற்கு விஞ்ஞானிகள் கூறும் விளக்கம் என்னவென்றால், சராசரியாக, நோய்த்தொற்று ஏற்படுவதற்கும் அவை வீழ்ச்சி அடைவதற்கும் இடையில் இரண்டு வார கால தாமதம் ஆகும்.குறையும் மரணம்இந்தியாவில் தினசரி புதிய கேஸ்கள் மே 16 முதல் குறையத் தொடங்கியதால், ஜூனவாரத்திலிருந்து இறப்பு எண்ணிக்கை குறையும். கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வரும் போக்கு, வரும் நாட்களில் கோவிட் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையில் கணிசமான குறைப்பு ஏற்படலாம்" என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Post a Comment

Previous Post Next Post