கொரோனா வைரஸ் உருவானது எப்படி?.. 90 நாட்களில் அறிக்கை.. உளவுத் துறைக்கு பிடன் உத்தரவு

 


வாஷிங்டன்: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் சீனாவில் விலங்குகளிடமிருந்து தோன்றியதா இல்லை ஆய்வு கூடத்தில் இருந்து வெளியேறியதா என்பது குறித்து அறிக்கை உளவுத் துறை 90 நாட்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் எனும் உயிர் கொல்லி தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது.இந்த நிலையில் இந்த வைரஸ் சீன வைரஸ் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இந்த வைரஸ் வேண்டுமென்றே சீனாவிலிருந்து பரப்பியதாக டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸை ஒரு உயிரி ஆயுதமாக்க சீனா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே விவாதித்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. இந்த வைரஸ்ஸை சீன ராணுவமும் சுகாதாரத் துறையும் இணைந்து உருவாக்கியதாக ஆஸ்திரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டது. கொரோனா வைரஸ் உருவானது எப்படி என்பதில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் அது எங்கிருந்து உருவானது என்பது குறித்து 90 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உளவுத் துறைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஜோ பிடன் கூறுகையில் கடந்த ஓராண்டாக உலகில் 3.4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை காவு வாங்கிய இந்த வைரஸ் எப்படி உருவானது என்பது குறித்து உளவுத் துறை இரு வேறு தகவல்களை கூறுகின்றன.எனினும் தீர்க்கமான முடிவுக்கு வரவில்லை. இதனால் வைரஸின் தோன்றல் குறித்து ஆய்வு செய்ய தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்கி சரியான ஒரு முடிவை அறிக்கையாக தெரிவிக்க வேண்டும். இதற்கு உளவுதுறைக்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்படுவதாக பிடன் தெரிவித்துள்ளார்.வுகானில் வெட் மார்க்கெட்டில் இந்த வைரஸ் தோன்றியதாகவும் வுகானில் உள்ள ஆய்வுக் கூடத்திலிருந்து இந்த வைரஸ் வெளியேறிதாகவும் இருவேறு தகவல்கள் நிலவுகின்றன. இதுகுறித்து சீனா , பெருந்தொற்றுக்கும் எங்களை வைத்து அமெரிக்கா செய்யும் அரசியலுக்கும் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என கூறி வருகிறது குறிப்பிடத்தக்கது..

Post a Comment

Previous Post Next Post