சாந்தினியா? யாருன்னு எனக்கு தெரியாது.. மறுத்த மாஜி அமைச்சர்.. 5 பிரிவில் பாய்ந்தது வழக்கு


சென்னை: நாடோடிகள் பட நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை உள்பட ஐந்து பிரிவின் கீழ் சென்னை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை நேரில் அழைத்து விசாரணை நடத்தவும் சென்னை மகளிர் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.தஞ்சை மருத்துமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து கொடுத்த துபாய் தொழில் அதிபர்! நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் சாந்தினி... மலேசியாவை சேர்ந்தவர்.. இவர் இன்று திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்தார்.திருமணம் செய்ய மறுப்புஅந்த புகாரில் சாந்தினி கூறியிருந்ததாவது: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, பின்னர் கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி, 5 வருஷமாக என்னுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தார். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று நான் இப்போது அவரை வலியுறுத்தினேன்.கொலை செய்ய முயற்சிஅதற்கு அவரோ, அந்தரங்க போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறார்.. மேலும் கூலிப்படையை ஏவி என்னை கொலை செய்யப் போவதாகவும் மிரட்டுகிறார்... இதை பற்றி கேட்டதற்கு என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார்... இவரால் நான் 3 முறை கருக்கலைப்பு செய்துள்ளேன்.அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என புகாரில் கூறியிருந்தார்.பணம் பறிக்க முயற்சிபல்வேறு குற்றச்சாட்டுகளையும் பாலியல் புகார்களையும் கூறிய சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் செல்போனில் வாட்ஸ் ஆப்பில் அவருடன் பேசிய சாட்டுகளையும் வெளியிட்டிருந்தார் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தனியார் தொலைகாட்சி சேனல் தொடர்பு கொண்டு கேட்டது. அதற்கு மணிகண்டன், அந்த பெண் யாரென்றே தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தொலைபேசி மூலம் கூறுகையில் ,அந்தப் பெண் யார் என்றே எனக்கு தெரியாது. புகைப்படங்கள் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் வெளியே சொல்ல மாட்டோம் என அந்தக் கும்பல் மிரட்டியது. எனது வழக்கறிஞர் மூலம் விசாரித்தேன், அப்போதுதான் அவர்கள் பணம் பறிக்கும் கும்பல் என்பதை அறிந்தேன். முதலில் புகைப்படங்களை வெளியே சொல்லாமல் இருக்க 3 கோடி கேட்டார்கள், பின்னர் 2 கோடி, 30 லட்சம் என பேரம் பேசினார்கள். தவறு செய்தால்தானே பயப்பட வேண்டும். நான் எந்த தவறும் செய்யாத போது ஏன் பயந்து போய் பணம் கொடுக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.வன்கொடுமை வழக்குஇந்த சூழலில் நடிகை சாந்தினி புகார் குறித்து சாஸ்திரி நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்தனர். அதன் பின்னர் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சாந்தினி புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், அவரை அழைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.',

Post a Comment

Previous Post Next Post