தஞ்சை மருத்துமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைத்து கொடுத்த துபாய் தொழில் அதிபர்!

 


-துபாய்: துபாய் தொழில் அதிபர் எஹியா , தஞ்சாவூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 கோடி செலவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ( பிளான்ட்) அமைத்து கொடுத்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தாக்கம் இருந்து வருவதால் பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், தொழில் அதிபர்கள் தமிழகத்துக்கு உதவி செய்து வருகின்றனர்.இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபரான எஹியா என்பவர் தஞ்சாவூர் மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 கோடி செலவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ( பிளான்ட்) அமைத்து கொடுத்துள்ளார். தொழில் அதிபர் எஹியா, துபாயில் பிளாக் டுளிப் குழுமம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது பூர்விகம் தஞ்சாவூர் மாவட்டம் நடுகடை என்பதாகும். 'தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தேன். சொந்த மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு உதவும் வாய்ப்பே எனக்கு கிட்டியது' என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் எஹியா.ஐக்கிய அரபு அமீரக தி.மு.க அமைப்பாளராக இருக்கும் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான் தமிழகத்துக்கு கொரோனா நிதி, உதவி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தொழில் அதிபர் எஹியா தமிழகத்துக்கு உதவி புரிய உறுதுணையாக இருந்தது எஸ்.எஸ்.மீரான் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post