மறுக்கப்பட்ட கல்விக் கடன்: மதுரை மாணவி தற்கொலை

 


கல்விக் கடன் கிடைக்காததால் மதுரைய சேர்ந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

  

கடந்த மார்ச் 15 ஆம் தேதி மக்களவையில், கல்விக்கடன் தொடர்பான கேள்விக்கு, கல்விக்கடன் பெற்ற மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். இந்நிலையில் மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் கல்விக் கடன் மறுக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. 

 

மதுரை தெப்பகுளம், தேவிநகர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மாணவி தாரணி. இவர் கல்லூரிப்படிப்பிற்காக வங்கியில் கல்விக்கடன் பெற விண்ணப்பித்திருந்தார். இதற்கான ஆவணக்கட்டணம் தொகை 1,27,000 செலுத்தினார். ஆனால் இவருக்கு கல்விக்கடன் மறுக்கப்பட்டது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அவரது உடலை உடல்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. 


Post a Comment

Previous Post Next Post