இன்ஸ்டாகிராமை திறக்காமல் story ஐ-ஐ எப்படி உள்ளீடு செய்வது?

 


சமூக ஊடக தளத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பதிவிடஇன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் அதிக பிரபலமான முறையாகும். அதற்கென இன்ஸ்டாகிராம் செயலியை திறந்து, படத்தை தெரிவு செய்து பின்னர் அதை பகிருவதை சில பயனர்கள் சிரமமாக உணர்கின்றனர். அதற்கென புதிய வழிமுறையை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.
திரெட்ஸ் (Threads) என்ற காமிரா செயலியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நெருங்கிய நண்பர்களின் பதிவுகள், ஸ்டோரிகளை தொடர முடியும். இன்ஸ்டாகிராமில் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவர்களோ பதிவுகளை பகிரவும் இது உதவுகிறது. இந்தச் செயலியை கொண்டு பயனர்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளை பகிர முடியும்.
1. இன்ஸ்டாகிராம் செயலியின் திரெட்ஸ் (Threads) செயலியை தரவிறக்கம் செய்து நிறுவவும்.2. இன்ஸ்டாகிராம் பயனர் கணக்கு விவரங்களைக் கொண்டு உள்ளே நுழைந்து செயலி மற்றும் கணக்குக்குத் தேவைப்படும் அனுமதிகளை அளிக்கவும்.3. நீங்கள் சாட் செய்யவும் ஸ்டோரிகளை பகிரவும் விரும்பும் நண்பர்களை ஃபேவரைட் பட்டியலில் சேர்க்கவும்.4. செயலியின் ஹோம்ஸ்கிரீனில் இரண்டாவது பட்டியை தெரிவு செய்யவும். அதில் படத்தை எடுத்து, எடிட் செய்து, தலைப்புகளை இணைத்து மேலே (upward) காட்டும் அம்புகுறியை அழுத்தவும்.5. தொடர்பு பட்டியலில் ‘யுவர் ஸ்டோரி’ என்பதை தெரிவு செய்யவும். குறிப்பிட்டவர்களோடு மட்டும் பகிர விரும்பினால் தொடர்பு பட்டியலில் அவர்களை மட்டும் தெரிவு செய்யலாம்.6. ஷேர் (Share) பொத்தானை அழுத்தினால் போதும்.


Post a Comment

Previous Post Next Post