அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் , கூடுதல் கல்வித் தகுதி பட்டம் பெற்று ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாதவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு.

 


IMG_20210321_192027

அரசாணையில் , கூடுதல் கல்வித் தகுதிக்கு , வழங்கப்படும் முன் ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது . பார்வை ( 2 ) -ல் காணும் அரசாணையில் , ஆசிரியப்பணியாளர்களுக்கும் கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும் முன் ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , அவ்வரசாணையில் , 10.03.2020 - க்கு முன்னதாக கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களுக்கு , அரசு நிதித்துறை ஒப்புதலின் அடிப்படையில் , சம்மந்தப்பட்ட நிர்வாகத்துறை அனுமதி வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 10.03.2020 - க்கு முன்னர் , தங்கள் கல்லூரிகளில் , அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து , ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் , கூடுதல் கல்வித் தகுதி M.Phil | Ph.D பட்டம் பெற்று ( PB - 3 ( Rs.15600-39100 + AGP 6000/7000 / 8000 என்ற ஊதியக்கட்டில் அல்லது நிலை 10,11,12 - ல் ஊதியம் பெற்றுவரும் ) ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படாத ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உரிய விதிமுறைகளின்படி , முதல்வர் நிலையில் கூர்ந்தாய்வு செய்து , பட்டச்சான்றின் மெய்த்தன்மை அறிக்கையுடன் 18.03.2021 - க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post