கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலை வாய்ப்பு

 

இந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன்(குரூப்-சி) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Tradesman Mate (Group-C)

காலியிடங்கள்: 1159

சம்பளம்: மாதம் ரூ.18,000 – 56,900

வயதுவரம்பு: 15.03.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஏதாவதொரு தொழிற்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்திய கடற்படையால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.205. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.03.2021

மேலும் விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Post a Comment

Previous Post Next Post