பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடத்த திட்டம்வரும் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கு பொறியியல் செமஸ்டர் தேர்வுகள்
ஆன்லைன் வாயிலாக நடத்த அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்
செய்முறைத் தேர்வுகள் வரும் 31ஆம் தேதிக்குள் நேரடி முறையில் நடத்த வேண்டும்

தமிழகத்தில்
கொரோனா வைரஸ்
பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் கல்வி, தேர்வு உள்ளிட்ட விஷயங்களை ஆன்லைன் வாயிலாகவே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை
அண்ணா பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை
செமஸ்டர் தேர்வுகள்
ஆன்லைன் மூலமாக நடைபெறும். செய்முறைத் தேர்வுகளை வரும் 31ஆம் தேதிக்குள் நேரடி முறையில் நடத்தி முடிக்க வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஷாக்; டிகிரி வாங்குவதில் பெரிய ஏமாற்றம்!

ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் உள்ளிட்ட விஷயங்களை ஆன்லைன் வாயிலாகவே நடத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களை நேரடியாக அழைத்து தேர்வு நடத்த முடியாவிட்டால், பின்னர் நடத்திக் கொள்ளலாம். இதற்காக உரிய முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

பரபரப்புகளை கிளப்பிய தன்னுடைய வீடியோவிற்கு விளக்கம் சொன்ன இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.

இறுதி செமஸ்டர் மற்றும் கடைசி செமஸ்டர்
அரியர் தேர்வுகள்
மட்டும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டன. அரியர் தேர்வுகள்
தமிழக அரசு
ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளால் அந்த தேர்வுகளை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தள்ளிப் போகிறதா 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு? வெளியான புதிய தகவல்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பி.இ, பி.டெக் படித்து பட்டம் வாங்கி வெளியே வந்த மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு 1,65,417 பேர் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்று வெளியே வந்தனர். ஆனால் 2020ல் 85,247 பேர் மட்டுமே பட்டம் பெற்றுள்ளனர். இது எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post