தேர்தல் நெருங்கும் நேரத்தில்.... தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்!


டெல்லி: தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்ற மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றுதேவேந்திர குல வேளாளர் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது கவனம் பெற்றுள்ளது. பட்டியல் பிரிவில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளர், தேவேந்திரகுலத்தான், வாதிரியார் என்ற 7 பிரிவினரையும் ஒன்றிணைத்து ஒரே சமூகமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல வருடங்களாக விடுத்து வந்தனர்.இந்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றது. பின்னர் இந்த கோரிக்கை மீது ஆணை பிறப்பித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. சமீபத்தில் சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கை கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் தேவேந்திர குல வேளாளர் மாற்ற மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதனை தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது.விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றுதேவேந்திர குல வேளாளர் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது கவனம் பெற்றுள்ளது.'!

Post a Comment

Previous Post Next Post