கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு

 


கூட்டுறவு சங்கங்களின் அனைத்து தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சென்னை ஐகோர்ட்

சென்னை:

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் கூட்டுறவு சங்கங்களின் சார்பில் சிறப்பு அரசு பிளீடர்கள் பால ரமேஷ், எல்.பி.சண்முகசுந்தரம், மனுதாரர்கள் சார்பில் சி.பிரகாசம் உட்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று காலையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

பதில் கூட்டுறவு சங்கங்களில் தற்காலிகமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த உத்தரவு வழக்கு தொடர்ந்த கூட்டுறவு சங்க தற்காலிக ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல், ஐகோர்ட்டில் வழக்கு தொடராத தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் இதேபோன்ற தற்காலிக ஊழியர்களுக்கும் பொருந்தும். இதனை 8 வாரத்தில் அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்Post a Comment

Previous Post Next Post