பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல்:

 


கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட
பாமக
படுதோல்வி அடைந்தது. இதையடுத்து 2019 மக்களவை தேர்தலில்
அதிமுக
உடன் கூட்டணி சேர்ந்தது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும் தனித்து போட்டியிடுவதை விட கூட்டணி தான் சரி என்ற முடிவில் பாமக உறுதியாக இருக்கிறது. இந்நிலையில் வரும் 2021ஆம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக தொடர்வதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கூட்டணி பேரத்தை அதிகரிக்கும் வகையில்
வன்னியர் இடஒதுக்கீடு
விவகாரத்தை பாமக கையிலெடுத்தது.

இடஒதுக்கீட்டை அறிவித்தால் தான் அதிமுகவுடன் கூட்டணி, இல்லையெனில் வெளியேறிவிடுவோம் என்று எச்சரித்தது. ஆனால் அதிமுக அரசு வன்னியர் இடஒதுக்கீடு பிரச்சினை பற்றி எந்தவொரு முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது. இதற்கிடையில் அமைச்சர்கள் சிலர் பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்தவொரு சுமூக முடிவும் எட்டப்படவில்லை.இதற்கிடையில் உள் ஒதுக்கீடு வழங்கினால் போதும் என்ற கோரிக்கைக்கு பாமக இறங்கி வந்துள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர்
தங்கமணி
இல்லத்தில் அமைச்சர்கள் சிவி சண்முகம், எஸ்.பி வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் ராமதாஸிற்கு சில வாக்குறுதிகளை முதல்வர்
எடப்பாடி பழனிசாமி
அளித்ததாக தகவல் வெளியானது. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துவிட்டு, தேர்தல் முடிந்த பிறகு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் பாமக இன்னும் முரண்டு பிடித்து வருவதாகவே தெரிகிறது. இந்நிலையில் அதிமுகவின் ஐடி பிரிவு தலைவர்
சுனில்
மூலம் உத்தேச பட்டியல் ஒன்று இணையத்தில் உலவ விடப்பட்டுள்ளது.

Click here to read more news


அதில் பாமகவிற்கு 21 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவை விட ஒரு தொகுதி அதிகம் என்பது கவனிக்கத்தக்கது. இதனை பாமக நிறுவனர்
ராமதாஸ்
ஏற்பாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதேசமயம் பாமகவுடன் கூட்டணி ஒப்பந்தம் முறையாக கையெழுத்திடப்பட்ட பின்னரே அதிகாரப்பூர்வ தொகுதிகள் அடங்கிய பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது.

பாமகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல்:

* மாதவரம்

* சோழிங்கநல்லூர்

* செங்கல்பட்டு

* காட்பாடி

* செஞ்சி

* பண்ருட்டி

* ஜெயங்கொண்டம்

* தர்மபுரி

* திட்டக்குடி(தனி)

* பென்னாகரம்

* திருக்கோவிலூர்

* குறிஞ்சிப்பாடி


* அணைக்கட்டு

* பூந்தமல்லி(தனி)

* கீழ் பென்னாத்தூர்

* பரமத்தி வேலூர்

* திருப்பத்தூர்(வேலூர்)

* அரவக்குறிச்சி

* பாபநாசம்

* வந்தவாசி(தனி)

* மன்னார்குடி

Post a Comment

Previous Post Next Post