ஒரு சவரன் தங்கம்ரூ.35,720-க்கு விற்பனைசென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.35,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த வாரத்தில் தங்கம் விலை குறைந்து வந்தது. இதைத் தொடா்ந்து, கடந்த சனிக்கிழமை தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது.


இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.35,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 குறைந்து, ரூ.4,465 ஆக இருந்தது. அதே நேரத்தில், வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.73.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.73,600 ஆகவும் இருந்தது.


திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)


1 கிராம் தங்கம்……………………….. 4,465


1 பவுன் தங்கம்………………………….35,720


1 கிராம் வெள்ளி………………………..73.60


1 கிலோ வெள்ளி………………………..73,600


சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)


1 கிராம் தங்கம்……………………….. 4,469


1 பவுன் தங்கம்………………………….35,752


1 கிராம் வெள்ளி………………………..73.40


1 கிலோ வெள்ளி……………………….73,400.

Post a Comment

Previous Post Next Post