பக்தர்களை ஆசீர்வதிக்கும் நாய்

 


கோயிலின் நுழைவு வாயிலில் அமர்ந்து பக்தர்களை ஆசீர்வதிக்கும் நாய் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.நாய்கள் இந்த உலகில் மிக அழகான உயிரினம். அதை மறுப்பதற்கில்லை. மகாராஷ்டிராவின் சித்தாதேக்கில் உள்ள சித்தி விநாயகர் கோயிலில் ஒரு நாய் பக்தர்களை ஆசீர்வதித்து கைகுலுக்கும் ஒரு வீடியோவும் அதை நிரூபிக்கிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அருண் லிமாடியா என்பவர் நாயின் வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகிவருகிறது.
கோயிலின் நுழைவாயிலுக்கு வெளியே ஓர் உயரமான மேடையில் அமர்ந்திருக்கும் அந்த நாயை நோக்கி பக்தர்கள் சிலர் கோயிலில் இருந்து வெளியேறும்போது கைகளை நீட்டுகின்றனர். பதிலுக்கு அந்த நாயும் பக்தர்களுக்கு கை கொடுத்து அவர்களை வரவேற்கிறது.

இன்னொரு வீடியோவில், ஒரு பக்தர் கோயிலிலிருந்து வெளியே வரும்போது நாய்க்கு முன்னால் தலையைக் குனிந்து கொள்கிறார். பதிலுக்கு நாய் அவரின் தலை மேல் கைவைத்து ஆசிர்வதிப்பது போல் சைகைகளைச் செய்கிறது. பார்ப்பதற்காக கியூட் ஆக இருக்கும் இந்த நாயின் செயலை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த இரண்டு வீடியோ கிளிப்களும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட நிலையில் அது வைரலாகி, ஒவ்வொன்றும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் மற்றும் 110 ஆயிரம் பார்வைகளை தாண்டி சென்று கொண்டிருந்தது.

Post a Comment

Previous Post Next Post