விஜய் சேதுபதியுடன் செல்ஃபி எடுத்த இளம் நடிகைக்கு கொரோனா

 

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகை அனுசுயா பரத்வாஜ். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், நடிகை அனுசுயா தனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளன. இதனால் கர்னூலில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்ல இருந்த எனது பயணத்தை ரத்து செய்து விட்டேன்.

மேலும் புதிய செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்

தற்போது நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ள இருக்கிறேன். என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.


சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்சேதுபதியுடன் செல்பி எடுத்துக்கொண்டுள்ளார். அந்த செல்பி புகைப்படத்தை நடிகை அனுசுயா தனது வலைத்தளத்தில் பகிர்ந்தார். இந்நிலையில் நாளை விஜய் சேதுபடி நடித்த மாஸ்டர் படம் 

வெளியாகவுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  Post a Comment

Previous Post Next Post