கர்நாடக எல்லையில் மீண்டும் பரபரப்பு


ஈரோடு மாவட்ட தாளவாடி அருகே தமிழககர்நாடக எல்லையில் தமிழ் பெயர் பலகை மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பைனாபுரம் அருகே எத்திக்கட்டை கிராமத்தில் தமிழக அரசின் சார்பில் ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றிய வரவேற்பு பலகையும்நெடுஞ்சாலைத் துறையின் எல்லை முடிவு பலகையும் வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இரண்டு பலகைகளையும் மர்மநபர்கள் சிலர் சேதப்படுத்திவிட்டு தப்பியோடினர்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பைனாபுரம் கிராமம் எத்திக்கட்டை அடர்ந்த வனப்பகுதி உள்ள பகுதி. அதனால் சேதப்படுத்தியவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பத்தில் சிக்கல் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக கடந்த 10ஆம் தேதி கர்நாடக எல்லையில் உள்ள ராமபுரம் கிராமத்தில் தமிழ் பெயர் பலகைகள் சேதப்படுத்தப்பட்டது. அந்த சம்பவம் தொடர்பாக இதுதொடர்பாக கன்னட சலுவாலியா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post