இவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டாம்...


இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. அதன்படி, முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், ஒவ்வாமை, காய்ச்சல், ரத்தக்கசிவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள் கோவாக்சின் தடுப்பூசியை போட்டுக்கொள்ள கூடாது என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக கோவேக்சின் தடுப்பூசியால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு தகுந்த இழப்பீடு வழங்கப்படும் என சுகாதார உழியர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. இதுதொடர்பான படிவத்தில் அவர்கள் கையெழுத்திட்ட பின்னரே அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும் புதிய செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்


அந்த படிவத்தில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் சார்பில், ”கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் செலுத்திக்கொண்ட பின், உங்களுக்கு ஏதேனும் மோசமான அல்லது கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டால், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் / மருத்துவமனைகளில் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரமான பராமரிப்பு உங்களுக்கு வழங்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை மிகவும் மோசமான பக்க விளைவு ஏற்பட்டால் அது தடுப்பூசியால் தான் ஏற்பட்டது என்று நிரூபிக்கப்படும் பட்சத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post