உங்களுக்கு பிடிக்கவில்லையா சேனலை மாற்றிக் கொள்ளலாம் நீதிமன்றம் உத்தரவு

 


பிரபல தொலைக்காட்சியான பொதிகை தொலைக்காட்சியில், அவ்வப்போது சம்ஸ்கிருத மொழியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று இம்மனு விசாரணை நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் வந்தது. இந்த விசாரணையில், ” மனுதாரருக்கு தேவையில்லை என்றால் தொலைக்காட்சியை அணைத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது சேனலை மாற்றலாம். 

இதைவிட முக்கியமான பல பிரச்சனைகள் உள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறோம் ” என்று தெரிவித்தனர். இந்த தீர்ப்பு மனுதாரருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Post a Comment

Previous Post Next Post