நடிகை நயன்தாராவால் கஷ்டமும் நஷ்டமும் தான்...


கொரோனா காலத்தில் இயற்கை நியதிகளை புரிந்து கொள்ளாமல், நடிகை நயன்தாரா கண்டபடி செலவு வைத்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமும், கஷ்டமும் ஏற்படுத்தி வருகிறார் என தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் அப்புக்குட்டி, வித்யூத் விஜய், கவுசிகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வெட்டி பசங்க. இந்த படத்தை மஸ்தான் என்பவர் இயக்கியுள்ளார்.இந்நிலையில், வெட்டி பசங்க படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, டைரக்டர் ஆர்.வி.உதயகுமார், கவிஞர் சினேகன், இசையமைப்பாளர் அம்ரீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் புதிய செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன், மனதில் உள்ளதை எல்லாம் வெளியே எடுத்து வைத்து வெடிக்கவைத்துவிட்டார். அவரது பேச்சில் அனல் பறந்தது. கொரோனா காலத்தில் திரைப்பட தயாரிப்பு செலவுகளையும், நடிகர், நடிகைகள் சம்பளத்தையும் குறைக்க வேண்டும்.

ஆனால், நடிகை நயன்தாரா தனக்கு மும்பையில் இருந்து சிகை அலங்கார நிபுணரையும், ஆடை வடிவமைப்பாளரையும் கொண்டு வருகிறார். அவர்களுக்கு சம்பளம், விமான செலவு மற்றும் ஹோட்டலில் தங்கும் செலவு இப்படி ஒரு நாளைக்கு ரூ.1½ லட்சம் வரை ஏராளமான செலவுகள் செய்ய வேண்டி உள்ளது. இப்படி இருந்தால் சினிமா எப்படி வாழும் என்று வேதனை தெரிவித்தார்.

தயாரிப்பாளர் ராஜன் குற்றச்சாட்டுக்கு நடிகை நயன்தாரா என்ன பதில் சொல்லப்போகிறார் என தெரியவில்லை. 


Post a Comment

Previous Post Next Post