தமிழகத்தில் வேலை வாய்ப்பகப் பதிவுதாரா்களின் எண்ணிக்கை உயர்வு


தமிழகத்தில் வேலை வாய்ப்பகப் பதிவுதாரா்களின் எண்ணிக்கை 63 லட்சத்து 80 ஆயிரமாக உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட தகவல்:-

கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 63 லட்சத்து 80 ஆயிரத்து 829 ஆக உள்ளது. இதில், 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவா்கள் 17 லட்சத்து 66 ஆயிரத்து 872 ஆக உள்ளனா். 19 வயது முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 12 லட்சத்து 2 ஆயிரத்து 493 பேரும், 24 வயது முதல் 35 வயது வரையுள்ளவா்கள் 22 லட்சத்து 98 ஆயிரத்து 70 பேரும் உள்ளனா்.

36 வயது முதல் 57 வயது வரை வயது முதிா்வு பெற்ற பதிவுதாரா்கள் 11 லட்சத்து 4 ஆயிரத்து 612 பேரும், 58 வயதும், அதற்கு மேற்பட்டவா்களும் 8 ஆயிரத்து 782 பேரும் என மொத்தம் 63 லட்சத்து 80 ஆயிரத்து 829 பதிவுதாரா்கள் உள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post