அபுதாபி பெண்கள் ஓபன் டென்னிஸ் : திடீர் திருப்பம்


 அபுதாபி, 

அபுதாபி பெண்கள் ஓபன் டென்னிஸ் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, தகுதி சுற்று மூலம் முன்னேறியவரும், 292-ம் நிலை வீராங்கனையுமான ரஷியாவின் அனஸ்டாசியா காசனோவாவை எதிர்கொண்டார். 72 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா 2-6, 4-6 என்ற நேர்செட்டில் காசனோவாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். சர்வதேச போட்டியில் முதல்முறையாக பிரதான சுற்றுக்குள் நுழைந்த 21 வயதான காசனோவா தரவரிசையில் 100 இடங்களுக்குள் உள்ள வீராங்கனையை சந்தித்தது முதல்முறையாகும். 

மேலும் புதிய செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்


2019-ம் ஆண்டுக்கு பிறகு, தரவரிசையில் 50 இடங்களுக்கு மேல் உள்ள வீராங்கனை ஒருவரிடம் பிளிஸ்கோவா சரண் அடைந்தது இதுவே முதல்முறையாகும்.

Post a Comment

Previous Post Next Post