இந்த ஆண்டு பேப்பர் லெஸ் பட்ஜெட் ....அறிமுகமானது புதிய மொபைல் ஆப்

 


இந்த மொபைல் ஆப்பை தேசிய தகவலியல் மையம் (NIC) உருவாக்கியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இதை டவுன்லோட் செய்யலாம். ஆண்ட்ராய்ட் போன், ஐபோன், ஐபேட் ஆகியவற்றில் இந்த ஆப்பை பயன்படுத்தலாம்.

இந்த மொபைல் பயன்பாட்டில் அனைத்து பட்ஜெட் ஆவணங்களும் இருக்கும். ஆண்டு இறுதி நிதி அறிக்கை (Annual Financial Statement), மானியங்களுக்கான தேவை (Demand for Grants), நிதி மசோதா போன்ற தகவல்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இருக்கும். இந்த மொபைல் பயன்பாட்டை யூனியன் பட்ஜெட் வலை இணையதளமான www.indiabudget.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Join telegram group : click here

வருகிற 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் 20201-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்ததும் முழு பட்ஜெட்டும் இந்த ஆப்ஸில் மக்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்படும்.

டிஜிட்டல் இந்தியாவாக மாறிவரும் இந்த நேரத்தில், டிஜிட்டல் பட்ஜெட்டை அறிமுகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம் என துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post