ஆவின் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

 


கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.4545/ESTT-1/2021

நிறுவனம்: கோவை மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்கம்

மொத்த காலியிடங்கள்: 15

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Manager(Shemes) – 01
சம்பளம்: மாதம் ரூ.55,500 – 1,75,700

பணி: Manager (Transport) – 01
பணி: Manager (Feed & Fodder) – 01
பணி: Manager (Purchase/Stores) – 01
சம்பளம்: மாதம் ரூ.37,700 – 1,19,500

பணி: Deputy Manager(Dairying) – 04
பணி: Deputy Manager (Dairy Chemist) – 03
பணி:Deputy Manager (Dairy Bacteriology) – 01
சம்பளம்: மாதம் ரூ.35,600 – 1,12,800

பணி: Private Secretary Grade-III – 01
பணி: Executive (Civil) – 01
சம்பளம்: மாதம் ரூ.20,000 – 63600 

தகுதி: ஒவ்வொரு பணிக்கு தனித்தனியான தகுதிகள் மற்றும் பணி அனுபவம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்த முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி அனைத்து பணியிடங்களுக்கும் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு  செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை The General Manager, T.D.C.M.P.U. Ltd., Coimbatore. பெருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணத்துக்கான டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The General Manager, T.D.C.M.P.U. Ltd.,
Kalampalayam Post, Coimbatore – 641 010

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 01.02.2021


Official Notification: click here


மேலும் புதிய செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்


இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள் 

Post a Comment

Previous Post Next Post