விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம்

 


சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களை சேர்ப்பது குறித்து தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும்.
கடந்த தேர்தல் பணிக்கு 3.50 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இம்முறை 4.50 லட்சம் பேரை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 93 ஆயிரமாக உயர்த்தப்படும். மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் ஓட்டுகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடலாம் என்றும், மற்றவர்கள் வாக்குச் சாவடிக்கு வந்தே வாக்களிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post