முடிவெட்ட சொன்னது ஒரு குற்றமா. ... .

 


பள்ளி கூடத்தில் ஆசிரியர் முடி வெட்ட சொன்னதால் மனம் உடைந்த பிளஸ் 2 படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கத்தை சார்ந்தவர் சஞ்சய் குமார். இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கொரோனா காலத்தினால் 9 மாதங்கள் மூடி இருந்த பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சஞ்சய் பள்ளிக்கு சந்தோஷமாக கிளம்பியுள்ளார்.


அங்கு ஆசிரியர் ஒருவர் தலையில் முடி அதிகம் உள்ளதால் வெட்டி கொண்டு வா என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டிற்கு வந்த சஞ்சய் நேராக ரூமிற்க்கு சென்று தாளிட்டு கொண்டான். நெடு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சஞ்சயின் தந்தை கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு சஞ்சய் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீஸ் சஞ்சய் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


தற்கொலை பற்றி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரிடமும் போலீஸ் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஆசிரியர் மற்ற பிள்ளளைகளின் எதிரில் முடி வெட்ட சொன்னதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அது மட்டும் இல்லாமல் தன்னுடன் படிக்கும் சக மாணவியை ஒரு தலையாக சஞ்சய் காதலித்து வந்துள்ளான். அவனது காதலை அந்த மாணவி ஏற்று கொள்ளாத காரணத்தினால் தற்கொலை செய்த்திருக்கலாம் என்ற இரண்டு கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறது

Post a Comment

Previous Post Next Post