கன்னியாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு. நிலை


கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் உருவாகி இருக்கும் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவு, கன்னியாகுமரி இடையே நிலை கொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை விடாது கருப்பாக பெய்து கொண்டிருக்கிறது. கார்த்திகை 1ஆம் தேதி சரியாக தொடங்கிய மழை தை 1ஆம் தேதி வரைக்கும் விடாமல் வெளுத்து வாங்குகிறது. 

Click here to read more news


திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பி விட்டன.மார்கழியில் மழை குறைந்து விடும். தை மாதம் அறுவடைக்காலமாகும். இந்த ஆண்டு மார்கழியிலும் அடைமழை காலம் போல கடந்த ஒரு வாரமாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. போகி தொடங்கி காணும் பொங்கல் வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. சொன்னது போலவே விடிய விடிய விடாது மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரி அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. என்ட் கார்டு இல்லாத வடகிழக்கு பருவமழை.. மாச கடைசில மீண்டும் தொடங்கி பிப். வரை நீளும் மழை.. வெதர்மேன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் உருவாகி இருக்கும் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை லட்சத்தீவு, கன்னியாகுமரி இடையே நிலை கொண்டிருக்கிறது.நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.'

Post a Comment

Previous Post Next Post