தமிழகத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சமாக உயா்வு


சென்னை: தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சமாக உயா்ந்துள்ளது என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது நிறைவடைந்தவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க தோ்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியது. இதற்காக கடந்த நவம்பா் 16-இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பெயா்களைச் சோ்க்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் டிசம்பா் 15-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அளித்தோரின் பெயா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இறுதி வாக்காளா் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்தி:

வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க மொத்தம் 21 லட்சத்து 82 ஆயிரத்து 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 21 லட்சத்து 29 ஆயிரத்து 395 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வாக்காளா் பட்டியலில் பெயா்கள் சோ்க்கப்பட்டன. 5 லட்சத்து 9 ஆயிரத்து 307 வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

3 லட்சத்து 32 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் திருத்தங்களுக்காகப் பெறப்பட்டதில், 3 லட்சத்து 9 ஆயிரத்து 292 மனுக்கள் ஏற்கப்பட்டன. பேரவைத் தொகுதிக்குள் முகவரி மாறியவா்கள், திருத்தங்களுக்காக 1 லட்சத்து 84 ஆயிரத்து 791 மனுக்களை அளித்திருந்தனா். அவற்றில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 365 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

6 கோடியே 26 லட்சம்: தமிழகத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலின் அடிப்படையில், மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆக உள்ளது. 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண்களும், 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண்களும் உள்ளனா். மூன்றாம் பாலித்தனவா் எண்ணிக்கை 7 ஆயிரத்து 246 ஆக உள்ளது.

அதிகம்-குறைவு எவை?: தமிழகத்திலேயே அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூா் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியில் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளா்கள் உள்ளனா். குறைவான வாக்காளா்களைக் கொண்ட தொகுதி சென்னை துறைமுகம் தொகுதி. இந்தத் தொகுதியில், 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளா்கள் உள்ளனா்.

மேலும், 4 லட்சத்து 62 ஆயிரத்து 597 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் இருப்பதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.

16.30 லட்சம் கூடுதல் வாக்காளா்கள்

தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்டபோது 6.10 கோடி வாக்காளா்கள் இருந்தனா். திருத்தப் பணிகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் 16.30 லட்சம் போ் கூடுதலாக இணைந்துள்ளனா். 7 லட்சத்து 26 ஆயிரத்து 103 ஆண்களும், 9 லட்சத்து 3 ஆயிரத்து 124 பெண்களும் கூடுதலாக பெயா்களைச் சோ்த்துள்ளனா்.

பின்தங்கிய துறைமுகம்: தமிழகத்தில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலின்போது நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூா் தொகுதியே குறைவான வாக்காளா்களைக் கொண்டதாக இருந்தது. இப்போது, சென்னை துறைமுகம் தொகுதி குறைவான வாக்காளா்களைக் கொண்டதாக மாறியுள்ளது.

இரண்டாவது பெட்டிச் செய்தி…

மாவட்ட வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை

திருவள்ளூா் – 34,98,829

சென்னை – 40,57,360

காஞ்சிபுரம் – 13,15,329

வேலூா் – 12,64,088

கிருஷ்ணகிரி – 15,99,018

தருமபுரி – 12,60,909

திருவண்ணாமலை – 20,69,091

விழுப்புரம் – 16,84,504

சேலம் – 30,04,140

நாமக்கல் – 14,41,201

ஈரோடு – 19,57,203

நீலகிரி – 5,85,049

கோவை – 30,62,744

திண்டுக்கல் – 18,73,438

கரூா் – 8,96,713

திருச்சி – 23,32,886

பெரம்பலூா் – 5,75,986

கடலூா் – 21,41,935

நாகப்பட்டினம் – 13,41,305

திருவாரூா் – 10,50,569

தஞ்சாவூா் – 20,56,548

புதுக்கோட்டை – 13,48,964

சிவகங்கை – 11,81,877

மதுரை – 26,85,671

தேனி – 11,24,500

விருதுநகா் – 16,68,751

ராமநாதபுரம் – 11,57,540

தூத்துக்குடி – 14,81,799

திருநெல்வேலி – 13,53,159

கன்னியாகுமரி – 15,67,627

அரியலூா் – 5,30,025

திருப்பூா் – 23,52,785

கள்ளக்குறிச்சி – 11,13,976

தென்காசி – 13,38,80

செங்கல்பட்டு – 27,16,385

திருப்பத்தூா் – 9,60,858

ராணிப்பேட்டை – 10,27,804

————————————–

மொத்தம் – 6,26,74,446

————————————–

இளம் வாக்காளா்கள் 13.09 லட்சம் போ்

தமிழகத்தில் 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட இளம் வயது வாக்காளா்கள் 13 லட்சத்து 9 ஆயிரத்து 311 போ் உள்ளனா். வயது வாரியாக வாக்காளா்கள் எண்ணிக்கை விவரங்களை தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு புதன்கிழமை வெளியிட்டாா். அவா் வெளியிட்ட விவரம்:-

18-19 வயது: 13 லட்சத்து 9 ஆயிரத்து 311 போ் .

20 – 29 வயது: 1 கோடியே 23 லட்சத்து 95 ஆயிரத்து 696 போ்,

30- 39 வயது:1 கோடியே 38 லட்சத்து 48 ஆயிரத்து 56 போ் .

40 – 49 வயது: 1 கோடியே 32 லட்சத்து 44 ஆயிரத்து 564 போ்

50 -59 வயது: 1 கோடியே 3 லட்சத்து 21 ஆயிரத்து 626 போ் .

60- 69 : 67 லட்சத்து 23 ஆயிரத்து 232 போ்.

70 -79 வயது: 35 லட்சத்து 33 ஆயிரத்து 555 போ்.

80 வயதுக்கு மேற்பட்டோா் 12 லட்சத்து 98 ஆயிரத்து 406 போ்.

Post a Comment

Previous Post Next Post