ஜனவரி 20 முதல் 3நாட்களுக்கு அமேசானில் ஆஃபர் மழை.... என்னென்ன ஆஃபர்...இதோ லிஸ்ட்


பிரபல இகாமர்ஸ் தளமான அமேசானில் வருகிற ஜனவரி 20 ஆம் தேதி முதல் Great Republic Day sale என்கிற சிறப்பு விற்பனையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தம் மூன்று நாட்கள், அதாவது ஜனவரி 23 வரை தொடரும் இந்த விற்பனையானைக்கான ஆரம்ப அணுகலை அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் ஜனவரி 19 ஆம் தேதியன்றே, அதாவது பொது விற்பனைக்கு 24 மணிநேர முன்கூட்டியே பெறுவார்கள்.

அமேசானில் நடக்கவுள்ள இந்த சிறப்பு விற்பனைக்கு முன்னதாக, நுகர்வோர் எதிர்நோக்கக்கூடிய சிறந்த ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் சிலவற்றை அமேசான் தளம் முன்னோட்டமிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S21, S21+ மற்றும் S21 அல்ட்ரா அறிமுகம்: இந்தியாவில் என்ன விலை?


மேலும் புதிய செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்


தயாரிப்புகளின் மீதான தள்ளுபடிகளுக்கு மேலதிகமாக, அமேசான் தளம் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் இஎம்ஐ, பஜாஜ் ஃபின்சர்வ் இஎம்ஐ கார்டு, அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு, அமேசான் பே லேட்டர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு 10% உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.

அமேசானின் இந்த சிறப்பு குடியரசு தின விற்பனையானது பல்வேறு பிரிவுகளில் உள்ள தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை தொகுக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

குறிப்பாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆக்ஸசரீஸ் மீது 40% வரை தள்ளுபடியுடன் கிடைக்கும், மேலும்

ரூ.5,000 வரை எக்ஸ்சேன்ஜ் மதிப்பு, 18 மாதங்கள் வரை நோ காஸ்ட் EMI விருப்பங்கள், போன்ற சலுகைகளும் அணுக கிடைக்கும்.

மேலும் சாம்சங் கேலக்ஸி எம் 02 எஸ், ரெட்மி 9 பவர், மி 10 ஐ மற்றும் கேலக்ஸி எஸ் 21 போன்ற ஸ்மார்ட்போன்களின் மீது வங்கி சலுகைகள் அணுக கிடைக்கும்.

ஐபோன் 12 மினி, ஒன்ப்ளஸ் 8 டி, சாம்சங் கேலக்ஸி எம் 51, சாம்சங் கேலக்ஸி எம் 31 எஸ், ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 9 ஆகியவைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் என்று அமேசான் டீஸ் செய்துள்ளது.

குறிப்பாக கேலக்ஸி M51 ஸ்மார்ட்போன் ஆனது குறிப்பிட்ட கால சலுகையின் கீழ் ரூ.8,000 தள்ளுபடியு வாங்க கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் மாடல்களிலேயே மீது முதல் முறையாக ஐபோன் 12 மினி ஆனது இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடியை காணும்.

போன வாரம் வந்த விவோ Y31s 5ஜி-க்கு இந்த வாரமே ஆப்பு வைத்த ஒப்போ A93 5ஜி!

விவோ ஸ்மார்ட்போன்கள் மீது 30% வரை தள்ளுபடியும், ரூ.5,000 வரை எக்ஸ்சேன்ஜ் மதிப்பும் அணுக கிடைக்கும் என்றும் அமேசான் வெளிப்படுத்தியுள்ளது.

ஒப்போ ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை 30% வரை தள்ளுபடி இருக்கும், மேலும் 12 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இ.எம்.ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கும்.

ஸ்மார்ட்போன்களைத் தவிர, மொபைல் பாகங்கள் ஆனது வெறும் ரூ.69 என்கிற ஆரம்ப விலையிலும், பவர் பேங்க் மீது 80% வரை தள்ளுபடியும், ஹெட்செட்டுகள் ரூ.179 முதலும் வாங்க கிடைக்கும்.

Post a Comment

Previous Post Next Post