15, 16, 17ஆம் தேதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை

 


சென்னை மெரினா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில், பொங்கல் விடுமுறை நாட்களான 15, 16, 17ஆம் தேதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, காணும் பொங்கலன்று மட்டும் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அது 3 நாட்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள், சென்னை கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும், வருகிற 15, 16, 17ஆம் தேதிகளில் மட்டும், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Join telegram :  Click here

Post a Comment

Previous Post Next Post