கேரளாவில் 11வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு திருவனந்தபுரம்:கேரளாவில் 11வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு குறைந்தது ₹4,650 சம்பள உயர்வு கிடைத்துள்ளது.கேரள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான 11வது ஊதியக்குழு அறிக்கை நேற்று முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்கப்பட்டது. திருத்தப்பட்ட சம்பளம், ஓய்வூதியம் மற்றும் டிஏ நிலுவைத்தொகையை வழங்க பட்ஜெட்டில் கூடுதலாக ₹15 ஆயிரம் கோடி ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ₹17 ஆயிரமாகவும், அதிகபட்ச அடிப்படை சம்பளம் ₹1.20 லட்சமாகவும் இருந்தது.

மேலும் புதிய செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்இந்த நிலையில் 11வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பளத்தின் சராசரி அதிகரிப்பு 10 சதவீதம் ஆகும். இதன்படி குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ₹16 ஆயிரத்து 500ல் இருந்து 23 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல அதிகபட்ச அடிப்படை சம்பளம் ₹1.20 லட்சத்தில் இருந்து 1 லட்சத்து 66 ஆயிரத்து 800 ஆக உயர்கிறது. குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பு ₹700; அதிகபட்சம் ₹3,400. 2019 ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு இந்த சம்பள உயர்வு வழங்கப்படும். அதிகரித்த சம்பளம் ஏப்ரல் முதல் கிடைக்கும்.

வரும் 2024ம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் அடுத்த ஊதிய திருத்தம், 2026 ஜனவரியில் மத்திய ஊதிய திருத்தத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தினால் போதும் எனவும், செலவினங்களை குறைக்க ஊழியர்களின் ஓய்வு வயதை ஓராண்டு நீட்டிக்கவும் பரிந்துரை ெசய்யப்பட்டுள்ளது.இதுபோல குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹11 ஆயிரத்து 500; அதிகபட்சம் 83 ஆயிரத்து 400. குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதியம் ₹11 ஆயிரத்து 500; அதிகபட்சம் 50 ஆயிரத்து 40. ேமலும் கிராஜுவிட்டி வரம்பு 14 லட்சத்தில் இருந்து 17 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்திற்கு ₹1,000 கூடுதலாக வழங்கப்படும். இந்த சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வால் அரசுக்கு ₹4,810 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
Post a Comment

Previous Post Next Post