10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. லட்சம் ரூபாய் கூட கிடைக்கும்.. இந்த ஒன்று தெரிந்தால் போதும்!


சென்னை: வேலை வாய்ப்புகளை அள்ளித்தரும் படிப்புகள் என்றால் சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் படிப்பு தான் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். 10ம் வகுப்பு மட்டுமே நீங்கள் படித்திருந்தாலும், கீழ்கண்ட திறன்களில் ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டால், நல்ல ஊதியம் பெறலாம். ஏன் சொந்தமாக செய்து லட்சங்களில் கூட சம்பாதிக்கலாம். ஏன் இதைதிறன் என்று சொல்கிறேன் என்றால், நான் சொல்லப்போகும் நான்கும் படிப்பு அல்ல. திறமை, எந்த அளவிற்கு வேலைகளை நுட்பமாகவும், நேசித்தும் செய்கிறார்களோ அந்த அளவிற்கு வேலை இன்பத்தையும், ஊதியத்தையும் சேர்த்து தரும்.படிப்பு தேவையில்லைஆம்..தமிழகத்தில் தற்போதைய நிலையில் டிடிபி டிசைனர்கள், போட்டோஷாப் டிசைர்கள், பைக் மற்றும் கார் மெக்கானிக் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள், சமையல் கலையில் நிபுணத்துவம் உள்ளவர்கள் நன்றாக சம்பாதிக்க முடியும். 

மேலும் புதிய செய்திகளை அறிய இங்கே கிளிக் செய்யவும்


வேலை சென்றாலும் சரி, சொந்தமாக ஆரம்பித்தாலும் சரி நன்றாக சம்பாதிக்க முடியும்.. மேலே சொன்ன விஷயங்களுக்கு பெரிய அளவில் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரிரு வருடங்களிலேயே நல்ல ஊதியம் பெற முடியும். ஏன் நல்ல ஊதியத்தை எங்கு சென்றும் கேட்க முடியும். அந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் டிமாண்ட் உள்ளது.டிடிபி டிசைனர்கள்இன்றைக்கு தமிழகம் முழுவதும் உள்ள பிளக்ஸ் பேனர்கள் கடைகளுக்கு முக்கியமானவர்கள் என்றால் டிடிபி டிசைனர்கள் தான். இதேபோல் புத்தகம், செய்தி தாள்களை வடிவமைப்பது, டிவி தொலைக்காட்சி நிறுவனங்களில் நியூஸ் கார்டு போடுவது என வேலைவாய்ப்பு மிக அதிகம். இதேபோல் தொலைக்காட்சி மற்றும பத்திரிக்கைகளில் கொடுக்கப்படும் விளம்பரங்களை தயாரித்து தருவது போன்ற பணிகளுகளுக்கும், கட்அவுட் முதல் விசிட்டிங் கார்டு வரை டிசைன் செய்ய நிறைய பேர் தேவை உள்ளது. எல்லா ஊரிலும் இத்தொழிலில் நிபுணத்துவம் உள்ளவர்கள் மிகக்குறைவு. எனவே இதை கற்றுக்கொண்டால் நல்ல ஊதியம் பெறலாம். ஏன் சொந்தமாக ஜாப் ஓர்க் போல் எடுத்து லட்சங்கள் கூட ஒரே மாதத்தில் சம்பாதிக்க முடியும்.கல்யாண ஆல்பம்இதேபோல் இன்னொரு முக்கியமான டிசைன் தொழில் போட்டோஷாப் தொழில். கல்யான ஆல்பம் தயாரிப்பதில் இவர்களது பணி அளப்பரியது. இதேபோல் பிளக்ஸ் பேனர் தயாரிப்பதிலும் இவர்கள் பணி முக்கியமானது. இன்றைக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளவர்கள் என்றால் போட்டோஷாப் நன்றாக தெரிந்தவர்கள் தான். நன்றாக தொழில் தெரிந்தவர்களுக்கு சென்னை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களில் கூட நல்ல ஊதியத்துடன் வேலை காத்துக்கிடக்கிறது. சொந்தமாகவும் ஜாப் ஒர்க்காக பணிகளை முடித்து கொடுத்து நன்றாக சம்பாதிக்கவும் போட்டோஷாப்பர்களுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.பைக் மெக்கானிக்பைக் அல்லது கார் மெக்கானிக் தொழிலை கற்றுக்கொண்டால் காலத்திற்கும் கவலைப்பட வேண்டியதில்லை. நன்றாக சம்பாதிக்க முடியும். பெரிய பெரிய கார்ப்பரேட் கார் அல்லது பைக் தொழில் தொழிற்சாலைகளில் பணியாற்ற உதவும். அங்கு நல்ல ஊதியம் பெறலாம். இதேபோல் கார் அல்லது பைக் மெக்கானிக் ஷாப்களை சொந்தமாக நடத்தியும் தொழில் திறமையால் நன்றாக சம்பாதிக்க இயலும்.மாஸ்டர்கள் தேவைசமையல் கலை. இதை கேட்டரிங் போய் படித்து வந்தால அதற்கு மதிப்பு மிக அதிகம் என்று நினைக்கிறார்கள். பைவ் ஸ்டார் ஹோட்டல்கள், நட்சத்திர ஓட்டல்களில் பணியாற்ற கேட்டரிங் படிப்புதான் நிச்சயம் உதவும். அதேநேரம் சமையல் கலையை படிக்காவிட்டாலும், நன்றாக கற்றுக்கொண்டால் நிச்சயம் பெரிய அளவில் சம்பாதிக்க முடியும். உதாரணத்திற்கு நம்மூர்களில் புரோட்டோ அல்லது சாப்பாடு மாஸ்டர்கள், பாஸ்புட் மாஸ்டர்கள் கிடைப்பது அபூர்வமாக உள்ளது. அந்த அளவிற்கு ஓட்டல்கள் அதிகமாக உள்ளது. வெளிநாடுகளிலும் பெரிய டிமாண்ட் உள்ளது. மேலேசொன்ன நான்கு திறமைகளில் ஏதேனும் ஒரு திறமை இருந்தாலும் உங்கள் திறமையை நம்பி உலகம் உங்கள் பின் வரும்.'

Post a Comment

Previous Post Next Post